தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துக்க நாள்: தோனி ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவு! - DHONI RETIREMENT

இந்திய நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

DHONI RETIREMENT DAY
DHONI RETIREMENT DAY

By

Published : Aug 15, 2021, 4:58 PM IST

இந்தியாவில் அரசியல் தலைவர், திரைப்பட நடிகர், விளையாட்டு வீரர், யாரோ ஒருவர் தனது துறையில் ஒரு பொறுப்பில் இருந்து விலகுவதாகவோ அல்லது ஓய்வு பெறுவதாகவோ அறிவிப்பது என்பது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுவும் ஒரு விளையாட்டு வீரருக்கு ஓய்வு அறிவிப்பு என்பது கடுமையான முடிவாகவே இருக்கும். சச்சின் தனது ஓய்வை அறிவித்த பின் பலரும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டாம் என்ற முடிவெடுத்தது எல்லாம் இங்கு நடந்தது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய தோனியின் அறிவிப்பு

அப்பிடியிருக்க, கடந்தாண்டு இதே நாளில் உலகமே கரோனா பெருந்தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அறிவிப்பு ஒன்று வெளியானது. அதுதான் தோனியின் ஓய்வு அறிவிப்பு.

எந்த ஒரு பெரிய முடிவையும் தோனி சர்ப்ரைஸாகத்தான் அறிவிப்பார் என்றாலும், ஓய்வு அறிவிப்பையும் அவர் திடீரென தெரிவித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் ரன்-அவுட்டாகி வெளியேறிய பின், 2020 டி20 உலகக்கோப்பை அணியில் தோனி இருப்பாரா என்ற யோசனையில்தான் இருந்தனர்.

இருந்தாலும், வழியனுப்பும் போட்டி கூட இல்லாமல் அவர் ஓய்வை அறிவிப்பார் என்பது பெரிதும் ஏமாற்றத்தை அளித்தது.

தோனியைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா

அந்த அறிவிப்புக்கு சில மணிநேரத்திற்குப் பிறகு, தோனியின் ஆஸ்தான வீரரும், நண்பருமான சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

தற்போது, இரண்டு பேரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேஎல் ராகுல் மீது பீர் பாட்டில் மூடி வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details