தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!

ICC World Cup 2023: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா அல்லாத போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனையானது இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐசிசி உலக கோப்பை 2023
ICC World cup 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 3:13 PM IST

டெல்லி: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒருநாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும், இந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பயிற்சி ஆட்டங்களும் அடங்கும். இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது. இந்த டிக்கெட் விற்பனையானது செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை, பல கட்டங்களாக நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:ஒருநாள் உலக கோப்பை பயிற்சி அட்டவணை வெளியீடு! இங்கிலாந்து, நெதர்லாந்தை சந்திக்கிறது இந்தியா..!

டிக்கெட்களுக்கான தேவையை நிர்வகிப்பதற்கும், முடிந்த வரை ரசிகர்களுக்கு உலகின் தலைசிறந்த வீரர்களை காண்பதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாக இந்தியா அல்லாத பயிற்சி ஆட்டம் மற்றும் நிகழ்வு ஆட்டத்திற்கான விற்பனையை இன்று முதல் துவங்க உள்ளனர்.

இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை பின் வரும் தேதிகளில் தொடங்கும். ஆகஸ்ட் 30ஆம் தேதி கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம், 31ஆம் தேதி சென்னை, டெல்லி, புனே, செப்டம்பர் 1ஆம் தேதி தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பை, 2ஆம் தேதி பெங்களூரு மற்றும் கொல்கத்தா, 3ஆம் தேதி அகமதாபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனவும் அரைஇறுதி மற்றும் இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15ஆம் தேதி விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை https://tickets.cricketworldcup.com, “புக் மை ஷோ” என்ற இனையத்திலும் விற்பனையானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா!

ABOUT THE AUTHOR

...view details