பெங்களூரு: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் ஆட்டம் இன்று (நவ.4) பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணி மோதி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களம் இறங்கி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திர 108 ரன்கள் விளாசினார். இந்த உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் அவர் 3 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்தவகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலை இங்கு காணலாம்.
முதல் உலகக் கோப்பை பதிப்பில் அதிக ரன்கள்
532 - 2019 - ஜானி பேர்ஸ்டோ (11 இன்னிங்ஸ்)
523 - 2023 - ரச்சின் ரவீந்திரா (8 இன்னிங்ஸ்)
474 - 2019 - பாபர் ஆசம் (8 இன்னிங்ஸ்)
465 - 2019 - பென் ஸ்டோக்ஸ் (10 இன்னிங்ஸ்)
25 வயதுக்குள்ளாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
523 - 2023*- ரச்சின் ரவீந்திரா
523 - 1996 - சச்சின் டெண்டுல்கர்