தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

New Zealand vs Sri Lanka : நியூசிலாந்து அபார வெற்றி! அரைஇறுதிக்கு தகுதி?

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Cricket
Cricket

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 7:10 PM IST

Updated : Nov 9, 2023, 8:05 PM IST

பெங்களூரு :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46 புள்ளி 4 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக குசல் பெரரா 51 ரன், மஹிஷ் தீக்‌ஷேனா 38 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். 172 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டிவென் கான்வாய், ரச்சின் ரவீந்திரா அகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

துரிதமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். டிவென் கான்வாய் 45 ரன்னும் அதற்கு அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணை அணியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றது.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை மேத்யூஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன் மட்டும் எடுத்து போல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மன் 7 ரன்களில் நடையை கட்டினார். நிலைத்து நின்று விளையாடி டேரி 43 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

23 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. கிளென் பிலிப்ஸ் 17 ரன்னும், டாம் லாதம் 2 ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏறத்தாழ நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க :Sri Lanka VS New Zealand : நியூசிலாந்து மிரட்டலில் சுருண்ட இலங்கை!

Last Updated : Nov 9, 2023, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details