தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் ரத்து - நியூசிலாந்து - பாதுகாப்பு அச்சுறுத்தல்

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் மேற்கொள்ளவிருந்த 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளை ரத்து செய்வதாக, நியூசிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து
நியூசிலாந்து

By

Published : Sep 17, 2021, 8:54 PM IST

பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.17, 19, 21) மற்றும் 5 டி20 போட்டிகளில் (செப்.25, 26, 29, அக்.1, 3) விளையாட இருந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்க இருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தனது முழு சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பேரிழப்பு

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட ஒயிட் பேசுகையில், "எங்கள் நாட்டு அரசின் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் பாகிஸ்தானில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் எங்கள் வீரர்களின் உயிர் முக்கியம் என கருதி, இந்தச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம்.

இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பேரிழப்பாக இருக்கும். ஆனால், வீரர்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்" என்றார்.

கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சமரவீராவுக்கு இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் விராட்!

ABOUT THE AUTHOR

...view details