தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கபில் தேவுக்கே டஃப்.. 36 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! நெதர்லாந்துக்கு அடித்த லாட்டரி!

South Africa vs Netherland : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் குவித்ததன் மூலம் 36 ஆண்டு கால கபில் தேவ்வின் சாதனையை நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முறியடித்து உள்ளார்.

Netherland
Netherland

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 12:52 PM IST

Updated : Oct 18, 2023, 2:36 PM IST

தர்மசாலா : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வென்று வரலாற்றில் இடம் பிடித்தது.

இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கு களமிறங்கி 78 ரன்கள் விளாசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 36 ஆண்டுகால இந்திய கேப்டன் கபில் தேவின் சாதனையையும் முறியடித்து வரலாற்று பக்கத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்து உள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கபில் தேவ் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கி 72 ரன்கள் குவித்து இருந்தார். நேற்று (அக். 18) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதே 7வது விக்கெட்டுக்கு களமிறங்கி 78 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிக ரன்கள் குவித்த கபில் தேவ்வின் 36 ஆண்டு கால சாதனையை நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முறியடித்து புது சாதனை படைத்து உள்ளார். இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர் நிலே 60 பந்துகளில் 92 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணி பெற்ற மூன்றாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அதற்கு நடப்பாண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி பழிதீர்த்தது போல் ஆட்டம் அமைந்து உள்ளது.

இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமீபியாவை 64 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், தற்போது நேற்று (அக். 18) தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே, அயர்லாந்து நாடுகளை தவிர்த்து ஐசிசியின் ஒரு உறுப்பினர் நாட்டை நெதர்லாந்து அணி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். உலக கோப்பை தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போட்டியை சமன் செய்த நெதர்லாந்து அணி சூப்பர் ஓவர் சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளியேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், முழு கிரிக்கெட் அங்கீகாரம் பெறாத, அதாவது முழு உறுப்பினர் தகுதி பெற முடியாத ஒரு குட்டி அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :NZ VS AFG: ஆப்கானிஸ்தான் ஆட்டம் நியூசிலாந்திடம் பலிக்குமா..? சென்னையில் இன்று பலப்பரீட்சை!

Last Updated : Oct 18, 2023, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details