ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் அணி நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
ஐதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் :
பாகிஸ்தான் :இமாம் உல் ஹக், பக்கர் ஜமான், பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
நெதர்லாந்து :விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் கொலின், அக்கர்மன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இதையும் படிங்க :Pakistan Vs Netherland : பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?