கொல்கத்தா: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. லீக் ஆட்டங்களில் ஒரு தோல்வியை கூட காணாத இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்தது ஆஸ்திரேலிய அணி. இதை யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியையே அளித்தது.
இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரையில் பார்க்காத சிறந்த அணியாக உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியை காட்டி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார். இவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதாக உதவியது. இது எல்லாம் எப்படி சாத்தியம்? ஒரே இரவில் நிகழ்ந்தவையா? என்றால் இல்லை.
இவை எல்லாம் 10 ஆண்டுகள் ஐசிசி கோப்பையை வெல்லாததின் தாக்கம் என்று எடுத்து கொண்டாலும் சரி, இல்லை பிசிசிஐ-யின் நீண்ட கால திட்டம் என்று எடுத்து கொண்டாலும் சரி. பிசிசிஐ இந்திய ஏ அணி, பி அணி என அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்கி வைத்துள்ளது.
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு யார் யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டரிந்து தேர்வு செய்கின்றனர் தேசிய கிரிக்கெட் அகாடமின் (NCA) தேர்வாளர்கள். மேலும், எங்களிடம் தற்போது இருப்பது போல் சிறந்த XI பெஞ்சில் உள்ளது. யாருக்காவது காயம் ஏற்பாட்டாலோ அல்லது ஃபார்மில் இல்லாமல் போனாலோ மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். ஏரதாள 33 வீரர்கள் சிறந்த வீரர்களாக எங்களிடம் உள்ளனர் என பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.