செயின்ட் ஜான்ஸ் (ஆண்டிகுவா): இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன். இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என்னால் விளையாட முடியாது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எந்த அணியிலும் சேர்ந்து விளையாடவும் முடியாது. என்னைப்பொறுத்தவரை "ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் அணி என்றால் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணி தான்". ஐபிஎல் சீசன்களில் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த கீரன் பொல்லார்ட்
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்படுகிறேன். முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோரின் அளப்பரிய அன்புக்கும் ஆதரவுக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒரு குடும்பம். அது வெறும் வார்த்தைகள் அல்ல என உருக்கமாக பதிவிட்டுள்ளார். கீரன் பொல்லார்ட் 2010ஆம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். சிறந்த ஆல்ரவுண்டரான பொல்லார்ட் பல்வேறு போட்டிகளில் மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். மொத்தமாக 189 போட்டிகளில், பொல்லார்ட் 28.67 சராசரியில் 3,412 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 16 அரை சதங்கள், 69 விக்கெட்டுகள் அடங்கும். அவரது 13 ஆண்டுகளால் ஐபிஎல் பயணம் முடிவுக்குவந்துவிட்டதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பிரியாவிடை ட்வீட் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர். இருப்பினும் வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் பணியாற்றுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:T20 World Cup:பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து