கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இன்றைய போட்டியானது இவ்வளவு எளிதாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் கனவில் கூட நினத்திருக்க மாட்டார்கள்.
முதலில் பந்து வீசிய இந்திய அணி, இலங்கையை 50 ரன்களில் சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் முகமது சிராஜ். அவரது அபாரமான பந்து வீச்சால் எதிர் அணியை உருக்குலையச் செய்தார். அவர் இலங்கை அணிக்கு எதிராக 7 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்காக சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் அவருக்கு கிடைத்த 5,000 அமெரிக்க டாலரை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த பரிசு மைதான ஊழியர்களுக்கானது. ஏனென்றால், அவர்கள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை என்றால், இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியாது.