கொழும்பு: இன்று இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே உச்சரிக்கும் பெயர் சிராஜ்.. சிராஜ். ஏனென்றால், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முதல் தொடங்கி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரை அனைவரையும் ஒரே ஒவரில் மொத்தமாக ஆட்டமிழக்கச் செய்து பெவிலியன் திரும்பச் செய்தார், இந்திய வீரர் முகமது சிராஜ்.
ஆட்டத்தின் முதல் ஓவரே அற்புதமாக பந்து வீசி, அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார். அதனையடுத்து தனது இரண்டாவது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை களங்கடிக்கச் செய்தார். இப்படி ஒரு இலங்கை அணியின் சரிவை எவருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணியின் வீரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படி அவர் வீசிய ஓவர்கள் எல்லாம் விக்கெட்டுகள் மழை பொழிந்து கொண்டே இருந்தது. இலங்கை வீரர்கள் யாராவது இவரின் பந்து வீச்சை சமாளித்து ரன்கள் சேர்ப்பார் என இலங்கை ரசிகர்கள் நம்பிக்கையை தகர்த்து எறிந்தார், முகமது சிராஜ். இதனால் பல சாதனைகளை தன் வசம் ஆக்கினார், சிராஜ்.