தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2022, 12:12 PM IST

Updated : Mar 12, 2022, 12:20 PM IST

ETV Bharat / sports

புதிய சாதனை படைத்த மிதாலி ராஜ்... ரசிகர்கள் உற்சாகம்...

மகளிர் உலக கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

mithali-raj-breaks-world-cup-captaincy-record
mithali-raj-breaks-world-cup-captaincy-record

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தத் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது ஆட்டத்தை ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிவருகிறது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 123 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்களும் விளாசி அபார இரட்டை சதத்தை அணிக்கு கொடுத்தனர்.

இதனிடையே உலகளவில் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார். அந்த வகையில், 39 வயதான மிதாலி ராஜ் 24 உலகக் கோப்பை ஆட்டங்களில், 14 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு சமநிலை என்று 23 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்.. ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி?

Last Updated : Mar 12, 2022, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details