மும்பை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒயிட்-பால் கேப்டன் கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஏப்.20) அறிவித்தார். அவருக்கு வயது 34. இதுகுறித்து அவர், "அனைவருக்கும் வணக்கம், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். ஏனென்றால், மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்" எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொல்லார்டு, 2007ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.