ஹைதராபாத்: இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022ஆம் ஆண்டு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதுகுறித்து அகர்வால் கூறுகையில், இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். இதனால் அணியை எளிதாக வழிநடத்த முடியும் என்று நம்புகிறேன்.
இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் இலக்கை நோக்கி, பஞ்சாப் அணியை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக, உரிமையார்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றார். அகர்வால், இந்தியாவிற்காக 19 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் உள்பட 1,429 ரன்களை எடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.