அடிலெய்ட்:ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
சிட்னியில் நடந்த முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.