டெல்லி: இந்தய அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டியானது வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று (நவ.30) அறிவிக்கப்பட்டது. இந்த சுற்றுப் பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு வேண்டும் என விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி இருவருக்கும் ஓய்வு அளிப்பட்டு உள்ளது. அணியின் நிரந்தர கேப்டன் ரோகித் சர்மா இல்லாத பட்சத்தில் டி20 தொடரை சூர்யகுமார் யாதவும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுலும் அணியை வழிநடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தொடர்களுக்கு இடையில், இந்திய ஏ அணி - தென் ஆப்பிரிக்கா ஏ அணியும் 2 நான்கு நாட்கள் போட்டிகள் மற்றும் 3 நாட்கள் கொண்ட போட்டியிலும் மோதிக் கொள்கின்றன. இதில் இந்திய அணியை 4 நாட்கள் கொண்ட போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் வழிநடத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நான்கு நாட்கள் போட்டிக்கான இந்திய ஏ அணி: சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன்*, தேவ்தத் படிக்கல், பிரதோஷ் ரஞ்சன் பால், சர்ஃபராஸ் கான், கே.எஸ்.பாரத் (கேப்டன் & விகீ), துருவ் ஜூரல், ஷர்துல் தாக்கூர், புல்கித் நரங், சௌரப் குமார், மானவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் கவேர்ப்பா, துஷார் தேஷ்பாண்டே.
- அபிமன்யூ ஈஸ்வரன் உடல் தகுதியை பொறுத்து அணியில் இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது நான்கு நாட்கள் போட்டிக்கான இந்திய ஏ அணி: சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன்*, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, கேஎஸ் பாரத் (கேப்டன் & விகீ), துருவ் ஜூரல் (விகீ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஆகாஷ் தீப், வித்வத் கவேரப்பா, நவ்தீப் சைனி.
3 நாட்கள் கொண்ட போட்டிக்கான அணி விவரம்:ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், அபிமன்யு ஈஸ்வரன்*, தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின், புல்கித் நரங், ஹர்ஷித் ராணா, ஷர்துல் தாக்கூர், சௌரப் குமார், மானவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் கவேரப்பா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், முகமது. ஷமி, நவ்தீப் சைனி.
இதையும் படிங்க:Ind Vs Aus : தொடர் யாருக்கு? 4வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!