லண்டன்:இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.
இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கோலியின் முன்னெடுப்புகள்
மேலும், SENA நாடுகள் (South africa, England, New zealand, Australia) என்னும் அந்நிய நாடுகளில் கோலியின் தலைமையில் பல வெற்றிகளைக் குவித்துவருகிறது. 2020-21 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையில் கைப்பற்றி இருந்தாலும், விராட் கோலியின் பங்கு அளப்பரியது. இந்தியாவில் வேகப்பந்துவீச்சு முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், உலகத்தர சுழற்பந்துவீச்சாளருமான ஷேன் வார்னே புகழ்ந்துள்ளார்.