தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடர் - ராகுல் விளையாடுவது சந்தேகம்! - டி 20 தொடர்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

KL Rahul to miss out T20I series against West Indies
KL Rahul to miss out T20I series against West Indies

By

Published : Jul 27, 2022, 10:06 PM IST

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுலுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் , அவர் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்படும் போது உடன் செல்லவில்லை.

தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது , வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடி வரும் நிலையில் , வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த நிலையில் கே.எல் ராகுல் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் , அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்க போவதில்லை என கூறப்படுகிறது. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் , அவரை மேலும் ஒருவாரம் ஓய்வெடுக்க பிசிசிஐயில் உள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் டி-20 தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இஷான் கிஷன் அல்லது ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பினை பெற உள்ளனர்.

இதையும் படிங்க: 'சென்னை மாரத்தான்' போட்டியின் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details