இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இதையடுத்து நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இடது தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக இரண்டு டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று (நவம்பர் 23) தெரிவித்துள்ளது.