தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை; ராகுல் டிராவிட் - ஒருநாள் போட்டியில் இந்தியா

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் முக்கியமான நேரங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Dravid
Dravid

By

Published : Jan 24, 2022, 9:27 AM IST

கேப்டவுன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக இறுதிப்போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதுகுறித்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், "போட்டிகளில் முக்கிய நேரங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. ஒரு கேப்டனாக கே.எல்.ராகுல் இப்போதுதான் தொடங்குகிறார். இந்தப் போட்டிகளில் கே.எல். ராகுல் நன்றாகவே செயல்பட்டார். வரும் காலங்களில் சிறந்த கேப்டனாக வருவார்.

இந்திய அணி தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அடுத்த உலகக் கோப்பைக்கு அதிக நாள்கள் உள்ளது. அதற்குள் இந்தியா அணி சிறப்பாக மாறும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:IND vs SA: இறுதிவரை போராடிய இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ABOUT THE AUTHOR

...view details