தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து  பும்ரா விலகல் - Jasprit Bumrah ruled out of T20 World Cup

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விலகினார்.

டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்
டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்

By

Published : Sep 29, 2022, 4:08 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்

டெல்லி: இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். பயிற்சி செய்யும் ஏற்பட்ட முதுகு வலி காரணமாக மருத்துவரை நாடியுள்ளார். அப்போது முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், 2 மாதங்கள் ஓய்வெடுக்கும் வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் இந்த டி20 தொடரில் பும்ரா பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ “இந்த உலக டி20 தொடரில் பும்ரா பங்கேற்கமாட்டார். அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, 6 மாத காலத்திற்கு ஓய்வெடுக்க உள்ளார்” என ட்வீட் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 டி20 போட்டியில் விளையாடிய பும்ரா திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்க செல்லவில்லை. ஏற்கனவே இந்தியாவின் ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா மூட்டுவலியால் டி20 தொடரில் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் பிசிசிஐ துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா வின் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details