15ஆவது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது குவாலிஃபயரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி - சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் பாப் டூ பிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது குவாலிஃபயருக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி அரங்கத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயரில் ராஜஸ்தான் ராயஸ்ல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் 2 முறை மோதின. ஒன்றில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இரு அணிகளும் சம பலம் கொண்ட வீரர்களை உள்ளடக்கியது என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:Chessable Masters Finals: 2ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - பரிசுத்தொகை எவ்வளவு?