1973ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த சச்சின் டெண்டுல்கர், தனது பதினாறு வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, 2013ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா 2013ஆம் ஆண்டு சச்சினுக்கு வழங்கப்பட்டது.
சச்சின், ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்கள் என 100 சர்வதேச சதங்களைக் குவித்திருக்கிறார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறை 200 ரன்களை எடுத்தவர், உலக அரங்கில் மொத்தமாக 34,357 ரன்களைக் குவித்தவர் என மிகப்பெரும் சாதனைகளையெல்லாம் தன்வசம் வைத்துள்ளார் சச்சின். இந்தச் சாதனைகளால் மட்டும் சச்சின் இங்கு கொண்டாடப்படவில்லை.