ஹைதராபாத்: ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணி எனப் பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் சீசனில் தனது ஜெர்சியில் சிறிய மாற்றத்துடன் களமிறங்குகிறது.
இந்தப் புதிய ஜெர்சியை சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்தினார். புதிய ஜெர்சியுடன் இருந்த பார்சலை பிரித்து ரசிகர்களுக்கு அதைக் காண்பித்தார். இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "தல தரிசனம்" என்று கேப்ஷனோடு பகிர்ந்துள்ளது.
வழக்கமான மஞ்சள் நிறத்திலேயே இருக்கும் இந்த ஜெர்சியின் தோல்பட்டை பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் ஆடையில் இருக்கும் ஸ்டரிப்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இது இணைக்கப்பட்டிருப்பதாக அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து தனது ஜெர்சியில் எந்த பெரிய மாற்றமும் செய்யாமல் இருந்து வந்த நிலையில், தற்போது 13ஆவது சீசனில் முதல் முறையாக சிறிய மாற்றத்துடன் சென்னை அணி களமிறங்க உள்ளது. வரும் சீசனில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம்