தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் சென்னை vs லக்னோ - ஐபிஎல் 2022

ஐபிஎல் 2022ஆம் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

tata-ipl-2022-match-7-lucknow-super-giants-vs-chennai-super-kings-in-mumbai
tata-ipl-2022-match-7-lucknow-super-giants-vs-chennai-super-kings-in-mumbai

By

Published : Mar 31, 2022, 9:08 AM IST

மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதுவரை ஆறு லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (மார்ச் 31) ஏழாவது லீக் ஆட்டம் மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம். இரு அணிகளும் தனது முதலாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்யுமா என்னும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்:ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (கீப்பர்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (கீப்பர்), எவின் லூயிஸ், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு

ABOUT THE AUTHOR

...view details