பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தி சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் 63 பந்துகளில் 119 ரன்கள் (188.89 ஸ்டிரைக் ரேட்) குவித்தார். இதில், 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்!
ஒன் மேன் ஷோ காட்டிய சாம்சன்.. கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றி! - கேஎல் ராகுல்
06:34 April 13
மேன் ஆஃப் த மேட்ச்!
23:28 April 12
221 ரன்கள் எடுத்தும் மிக நீண்ட போராட்டத்துக்கு பின்னர் வெற்றியை தனதாக்கியது பஞ்சாப். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஒன்மேன் ஷோ காட்டிய நிலையில் சதம் விளாசினார். கடைசி ஓவரிலும் சிக்ஸர் விளாசி பஞ்சாப் ரசிகர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார்.
மும்பை: பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் திங்கள்கிழமை (ஏப்.12) மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் கேஎல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். தீபக் ஹூடா தன் பங்குக்கு 28 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் சதம்
ராஜஸ்தான் தரப்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும், ரியான் பரக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா களமிறங்கினர். ஆரம்பமே ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருக்கும் விதமாக பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முகம்மது சமி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
அடுத்து விக்கெட் கீப்பரும் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரராக மனன் வோரா 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் அரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜோஸ் பட்லரும் 25 ரன்னில் அவுட் ஆக, சஞ்சு சாம்சன் மட்டும் ஒருபுறம் நங்கூரம் பாய்ந்தது போல் நிலைத்து நின்று ஆடினார். எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். தொடர்ந்து சிவம் துபே (23), ரியான் பராக் (25) என ஆட்டமிழந்தனர். இந்நிலையில் சதத்தை பூர்த்தி செய்தார் சஞ்சு சாம்சன். அவர் நேர்த்தியாகவும், அதேவேளையில் அதிரடியாகவும் அடித்து ஆடினார்.
திக் திக் கடைசி ஓவர்
தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. சாம்சன் 112 (58 பந்துகள்) ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ஒரு ரன்னிலும் களத்தில் நின்றனர். கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். சஞ்சு சாம்சன் எதிர்கொண்டார், முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.
நான்காவது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார் சாம்சன். இதனால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏனெனில் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது. தொடர்ந்து 5ஆவது பந்தில் சாம்சன் ரன் ஓடவில்லை, ஆறாவது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்த முயற்சித்த சாம்சன் கேட்ச் ஆகி அவுட் ஆனார். சாம்சனின் கேட்சை தீபக் ஹூடா லாவகமாக லபக்கென பிடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் தித்திப்பான வெற்றியை பதிவு செய்தது.