நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 3.79 லட்சம் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு உதவும் நோக்கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 7.5 கோடி (10 லட்சம் அமெரிக்க டாலர்கள்) நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறக்கட்டளையான ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை - பிரிட்டன் ஏசியன் அறக்கட்டளை இணைந்து இந்த நிதியுதிவியை அறிவித்துள்ளன.
இதுகுறித்து ராஜஸ்தான் ராய்ல் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில் ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பங்களிப்பாக வழங்குகிறது.