தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெற்றிக்கு வித்திட்ட ஹர்ப்ரீத்! பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் - punjab win

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

punjab
பஞ்சாப் கிங்ஸ் அசத்தல்

By

Published : May 1, 2021, 6:44 AM IST

ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் கே.எல்.ராகுல் 5 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 91(57) ரன்களுடனும், ஹர்பீரித் ப்ரர் 25(17) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடைய பெங்களூர் அணி களத்திலிறங்கியது. ஆனால், பஞ்சாப் அணியின் சிறந்த பந்துவீச்சால், ஆர்சிபி வீரர்கள் நடையை கட்டத் தொடங்கினர். விராட் கோலி 35 ரன்னும், ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என மூன்று ஜாம்பவான்களின் விக்கெட்களை வீழ்த்தி, அணியின் நட்சத்திர நாயகனாக மாறினார் ஹர்பிரீத் பிரார்.

இதையும் படிங்க:மிஷன் ஆக்சிஜன்: ரூ. 1 கோடி நன்கொடை அளித்த சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details