தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RR VS PBKS: அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டைவிட்ட பஞ்சாப்.. தப்பி பிழைத்த ராஜஸ்தான்! என்னாகப் போகுதோ?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான லிக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Ipl 2023
Ipl 2023

By

Published : May 20, 2023, 6:51 AM IST

தர்மசாலா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை தொடர் நெருங்கி உள்ள நிலையில் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நடைபெற்ற 66வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டர்ன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் இன்னிங்சை கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோர் தொடங்கினர். பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பிரப்சிம்ரன் 2 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

கேப்டன் ஷிகர் தவான் 17 ரன், அதர்வா டெய்டு 19 ரன், லிவிங்ஸ்டன் 9 ரன் என அடுத்தடுத்து பஞ்சாப் வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். கடைசியாக களமிறங்கிய சாம் கரண் மட்டும் அணியின் நிலையை அறிந்து சிறிது அடித்து ஆடினார். அவருக்கு உறுதுணையாக ஜித்தேஷ் சர்மா இருந்தார்.

இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி அணியின் ஸ்கோர் வேகத்தை சீரான இடைவெளியில் உயர்த்தினர். ஜித்தேஷ் சர்மா தன் பங்குக்கு 44 ரன்கள் (28 பந்து) விளாசி அவுட்டாகினார். அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான், சாம் கரணுடன் இணைந்து அணியின் ரன் வேகத்திற்கு வலு சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. சாம் கரண் 49 ரன்களுடனும், ஷாருக்கான் 41 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரெண்ட் பவுல்ட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

188 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. அந்த அணிக்கும் தொடக்க எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடக்க வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தூத் படிக்கெல் ஆகியோர் தங்கள் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அரை சதத்தை கடந்த தேவ்தூத் படிக்கெல் (51 ரன்) ஆட்டமிழந்தார். மறுபுறம் பெரிது எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதனிடையே மறுமுனையில் விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர்ர் யாஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பெற்றது. கடைசி நேரத்தில் ஷிம்ரொன் ஹெட்மயர் 46 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற பக்கபலமாக இருந்தார். இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பஞ்சாப் அணி இழந்தது. அதேநேரம் ராஜஸ்தான் அணி நூலிழையில் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க :RCB vs SRH: நூற்றுக்கு நூறு பதிலடி கொடுத்த கோலி! பெங்களூரு அணி அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details