மொஹாலி:சண்டிகரின் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசொசியேசன் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 1) ஐபிஎல் தொடரின் 2ஆவது போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியில் கேப்டன் நிதிஷ் ராணா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்பதி களமிறங்கிய பஞ்சாப் பேட்டர்கள், 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 32 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்தார். அதேபோல கேப்டன் ஷிகர் தவான் 29 பந்துகளுக்கு 40 ரன்களையும், சாம் கர்ரான் 17 பந்துகளுக்கு 26 ரன்களையும் எடுத்தனர்.
மறுப்புறம் பந்து வீச்சில் கொல்கத்தாவின் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் மூவரும் தலா 1 விக்கெட்டையையும் வீழ்த்தினர். அந்த வகையில் 192 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா பேட்டர்கள் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்துள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரரான மன்தீப் சிங் 4 பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து வந்த அனுகுல் ராயும் 5 பந்துகளில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனிடையே ரஹ்மானுல்லா குர்பாஸ் 16 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்களுடன் விக்கெட்டானார்.
அதன்பின் வந்த கேப்டன் நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ராணா 9ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் விக்கெட்டானார். 17 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்களை எடுத்திருந்தது.
ஆகவே, மீதம் உள்ள 60 பந்துகளுக்கு 112 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து வந்த வீரர்கள் ்அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 16 ஓவர்கள் முடிவிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். அந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறையில் பஞ்சாப் அணி வெற்றி என அறிவிக்கப்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்:ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், நாதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:ரஹ்மானுல்லா குர்பாஸ் (கீப்பர்), மன்தீப் சிங், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
இதையும் படிங்க:TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணி களம் காணும்.. முழு அட்டவணை..