தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: பெங்களூருவை வீழ்த்திய பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் - பஞ்சாப் vs பெங்களூரு

ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

punjab-kings-demolish-rcb-by-54-runs-riding-on-half-centuries-from-bairstow-livingstone
punjab-kings-demolish-rcb-by-54-runs-riding-on-half-centuries-from-bairstow-livingstone

By

Published : May 14, 2022, 7:54 AM IST

மும்பை:ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் ஆட்டம் நேற்று (மே 13) பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளுக்கு 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 29 பந்துகளுக்கு 66 ரன்களையும் எடுத்தனர்.

மறுப்புறம் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். ஆகவே, 210 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 22 பந்துகளுக்கு 35 ரன்களையும், ராஜத் படிதார் 21 பந்துகளுக்கு 26 ரன்களையும் எடுத்தனர். எதிர்புறம் பந்து வீச்சில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், ராகுல் சாஹர் தலா 2 விகெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதன்படி பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க:சென்னையின் பிளே ஆஃப் கனவை நொறுக்கிய மும்பை

ABOUT THE AUTHOR

...view details