இந்தியாவில் கரோனா 2 ஆம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களிடையே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், 14ஆவது ஐபிஎல் தொடர் பாதியிலே ரத்து செய்யப்பட்டது.
கேகேஆரை விடாமல் துரத்தும் கரோனா! - கோவிட் 19
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தற்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், கொல்கத்தா அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 4ஆவது வீரர் ஆவர். இவரை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்டேண்ட் பை வீரராக பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்கள் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.