அகமதாபாத்:ஐபிஎல் 2023 போட்டியின் இறுதிப்போட்டி, நேற்று (மே 29) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங்கில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மழை நின்றதும் தொடங்கிய ஆட்டத்தில் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மீண்டும் மழை பெய்தது. இதனால் 15 ஓவர்கள், 171 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
இதனால், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை படைத்தது. இதனை அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, இந்த ஐபிஎல் 16வது சீசன் தொடங்கியதில் இருந்தே மகேந்திர சிங் தோனி இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
இருப்பினும், இதற்கு அவ்வப்போது ட்விஸ்ட் வைத்த பதில்களை தோனி கொடுத்து வந்தார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் தோனியிடம் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்துப் பேசிய எம்எஸ் தோனி, “என்னுடைய பதிலைத் தேடுகிறீர்களா? எனது ஓய்வை அறிவிக்க இது சிறந்த நேரம் என நினைக்கிறேன். ஆனால், நான் பல்வேறு இடங்களில் இருந்து அன்பைப் பெற்றுள்ளேன்.