தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் டெல்லி - பஞ்சாப் அணி மோதல்

மும்பை: முந்தைய லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்போடு டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் களம் இறங்குகின்றன.

PBKS team
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்

By

Published : Apr 18, 2021, 7:15 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணியை முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

148 ரன்கள் என மிகவும் குறைவான இலக்கை நிர்ணயித்தபோதிலும், 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் டாப் ஆர்டரை காலி செய்தது டெல்லி கேபிடல்ஸ்.

இருப்பினும் மில்லரின் பொறுப்பான ஆட்டத்துக்கு எதிராக எந்த வியூகமும் அமைக்க முடியாமல் தவித்தது டெல்லி. இதன் மூலம் ராஜஸ்தான் வெற்றியடைந்தது.

தொடக்கத்தை நன்றாக அமைத்து அதை சரியாக முடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த டெல்லி அணி, இந்தப் போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு செல்வதற்கு தகுந்து வியூகங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான அன்ரிச் ரோட்ஜே கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான நிலையில்,தற்போது குணமாகி முழு உடற்தகுதியுடன் உள்ளார். எனவே அவர் களமிறக்கப்பட்டால் அணியின் பவுலிங் பலம் கூடுதலாக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் திரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ், இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முழுவதுமாக சரண்டர் ஆனது.

சென்னை அணியின் துள்ளிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட புதுமுக வீரர் ஷாருக்கான் மட்டும் நிலைத்து ஆடி அணி கெளரவ ஸ்கோர் பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் இருந்தும் பார்ம் இல்லாமல் சொதப்பி வருகிறார்கள். இவர்கள் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் இன்றைய போட்டி அதிரடியாக இருக்கும் என நம்பலாம்.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப். 18) 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை தொடர் - அகமதாபாத்தில் இறுதிப்போட்டி

ABOUT THE AUTHOR

...view details