இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்.19ஆம் தேதி தொடங்கியது.
இதன் கடைசி லீக் போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. அன்றைய தினம் ஹைதராபாத் - மும்பை, பெங்களூரு - டெல்லி என இரு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், " ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்படவுள்ள இரண்டு புதிய அணிகள் குறித்தான அறிவிப்பு அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும்.
ஐபிஎல் 2021 பிளே ஆஃப்களுக்கு முந்தைய கடைசி இரண்டு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் விளையாடப்படும். லீக்கின் கடைசி நாளான அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் ஹைதராபாத் - மும்பை, பெங்களூரு - டெல்லி இரண்டு லீக் போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு நடக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வலிமை அப்டேட்டை மறக்க முடியுமா - மனம் திறந்த மொயின் அலி