கொல்கத்தா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் இன்னிங்சை பிரப்சிம்ரனும், கேப்டன் ஷிகர் தவானும் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 ரன்களில் பிரப்சிம்ரன் வெளியேற அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்சா டக் அவுட்டாகி வெளியேறினார். ஒருபுறம் வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்த பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் கடந்தார்.
1 சிக்சர் 9 பவுண்டரி அடித்து 57 ரன்கள் குவித்த ஷிகர் தவான் கேட்ச்சாகி வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. ஷாருக்கான் 21 ரன்னுடனும், ஹர்பிரித் பிரர் 17 ரன்களுடனும் களத்தில் நின்றனர். கொல்கத்தா அணியில் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
180 ரன்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ் மற்றும் ஹர்பீரித் பிரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க :GT vs LSG: சாஹா, கில் அதிரடி...சரவெடி - குஜராத் அணி அபார வெற்றி!