தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியின் வெறித்தனமான ரசிகர் கோலி செய்த செயல்... என்ன தெரியுமா? - msd

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அதிரடியாக ஆடிய தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி கோலி போட்ட இரண்டு ட்வீட்டுக்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

kholi two tweets about dhoni
kholi two tweets about dhoni

By

Published : Oct 11, 2021, 3:45 PM IST

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த முதல் குவாலிஃபயர் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியில், ருதுராஜ், உத்தப்பா ஆகிய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடியிருந்தாலும், மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், கேப்டன் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால், சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும், தோனி தான் சந்தித்த 6 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என 18 ரன்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ட்வீட்கள்

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் அதிரடியைக் கொண்டாடி முதலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.

அந்த முதல் ட்வீட்டில், "ஆட்டத்திற்குத் திரும்பினார் அரசன்... மிகச்சிறந்த ஃபினிஷர் அவர். மீண்டும் ஒருமுறை இன்றிரவு எனது இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏன் நீக்கினார்...

பின்னர், இந்த ட்வீட்டை நீக்கி விட்டு, முதல் ட்வீட்டை திருத்தி, இரண்டாவது ஒரு ட்வீட்டை பதிவிட்டார்.

அதில்,"ஆட்டத்திற்கு திரும்பினார் அரசன்... இதுவரை இல்லாத மிகச்சிறந்த ஃபினிஷர் அவர். மீண்டும் ஒருமுறை இன்றிரவு எனது இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, முதல் ட்வீட்டில் 'இதுவரை கிரிக்கெட் உலகில் இல்லாத ஃபினிஷர் தோனி' என்பதைக் குறிக்க, முதல் ட்வீட்டை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது, தோனியின் ஆட்டத்தின் மீது கோலி கொண்டுள்ள விருப்பத்தைக் காட்டுவதாகவும், தோனியின் மிகச்சிறந்த ரசிகர் என்றால் அது கோலி தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத்தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோப்பையை நோக்கி தோனி அடித்த ஷாட்: Finals'ல் சென்னை

ABOUT THE AUTHOR

...view details