ஜெய்ப்பூர்:கடந்த மார்ச் 31 அன்று தொடங்கிய ஐபிஎல் 2023 போட்டிகள் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டியின் 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், லக்னோ அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
இதில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இதில் லக்னோ அணியில் அதிகபட்சமாக கைல் மாயர்ஸ் அரைசதம் கடந்து 51 ரன்களும், கே.எல்.ராகுல் 39, நிக்கோலஸ் பூரன் 28 மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேபோல், தீபக் ஹூடா 2, அயூஷ் பதோனி மற்றும் யுத்விர் சிங் சாரக் ஆகிய இருவரும் தலா 1 என்ற சொற்ப ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
மேலும், குர்னல் பாண்டியா 4 ரன்களில் விளையாடி ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா, டிரெண்ட் போல்ட் மற்றும் ஜாசன் ஹோல்டர் ஆகிய வீரர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அணிக்கு வலு சேர்த்தனர்.
இந்த நிலையில், 155 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி இது வரையிலான 14 ஓவர்கள் வரை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இதில் யாஷஷ்வி ஜாய்ஸ்வல் 44, ஜோஸ் பட்லர் 40 ரன்களிலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 2 என்ற சொற்ப ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேபோல், லக்னோ அணியின் மார்கோ ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் 11இல், கே.எல்.ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கைல் மாயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா, அயூஷ் பதோனி, நவீன் உல் ஹாவ், யுத்விர் சிங் சாரக், ரவி பிஷ்நோய் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.
அதேபோல், ராஜஸ்தான் அணியின் பிளேயிங் 11இல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், யஷாஷ்வி ஜாஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மெயிர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா மற்றும் யுஜ்வேந்திரா சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர்.
மேலும், இதுவரை 4 தோல்வி 1 வெற்றி என மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 வெற்றி 2 தோல்வி என 6 புள்ளிகள் உடன் 2ஆம் இடத்திலும் புள்ளிப் பட்டியலில் உள்ளது.
இதையும் படிங்க:RR vs LSG: ஆதிக்கத்தை தொடருமா ராஜஸ்தான்? லக்னோ அணியின் வியூகம் என்ன?