கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலம்பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 8ஆவது ஆட்டம் இன்று (ஏப்ரல் 5) தொடங்கியது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் பேட்டர்கள் களமிறங்கினர்.
முதல் இன்னிங்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரரான கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளுக்கு 86 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கி இருந்த பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளுக்கு 60 ரன்களை எடுத்திருந்தார்.
இவர்களுக்கு அடுத்த வந்த பானுகா ராஜபக்சே முதல் பந்திலேயே ரிட்டயர்ட் ஹர்ட்டாகி கிளம்பினார். 4ஆவதாக வந்த ஜிதேஷ் சர்மா 27 ரன்களுடன் ஆட்டமிழக்கவே அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த வகையில், ஷாருக் கான், சிக்கந்தர் ராசா இருவரும் முறையே 11, 1 ரன்களுடன் விக்கெட்டாகினர். மறுபுறம் பந்துவீச்சில் ராஜஸ்தானின் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸ்:198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்னும், அஷ்வின் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோஸ் பட்லர் 19 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்து அணியின் தொடக்க இழப்பை சற்று ஈடுகட்டினர்.