மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி, மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷண் ஆகியோர் களம் இறங்கினர்.
21 ரன்கள் எடுத்திருந்த போது தேஷ் பாண்டே பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இஷான் கிஷண் 32 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 12 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த முறையும் ஏமாற்றினார். அவர் சான்ட்னர் பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.