ஹைதராபாத்:ஐபிஎல் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் டேவிட் வார்னர் 21 ரன்னிலும், பில் சால்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
DC vs SRH: சன்ரைசர்ஸ் அணிக்கு 145 ரன்கள் இலக்கு! - டெல்லி ஹைதராபாத் அணிகள் மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மிட்செல் மார்ஷ் 25, சர்ஃபராஸ் கான் 10, அமன் ஹக்கீம் கான் 4 ரன்களில் வெளியேறினர். மணீஷ் பாண்டே, அக்சர் படேல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து தலா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிபால் படேல் 5, ஆன்ரிச் நார்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட்டாகினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்கள், நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.