பெங்களூரு:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி விராட் கோலி, டு பிளெஸ்ஸி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இந்நிலையில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். எனினும், கேப்டன் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.