ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. லக்னோ (11 புள்ளிகள்), சென்னை (11) முறையே 2, 3வது இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் (10), பெங்களூரு (10), மும்பை (10), பஞ்சாப் (10) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 7வது இடங்களில் உள்ளன. 8 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி 8வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி 9வது இடத்திலும், டெல்லி அணி 10வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் Rivalry week நாளை (மே 6) தொடங்குகிறது. வரும் 12ம் தேதி வரை முக்கியமான அணிகள் மோதும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் அனைத்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அணிகள் இடையே கடும் போட்டி இருக்கும். தற்போது நடைபெற்று வரும் லீக் ஆட்டங்களை பொறுத்தவரை சில நேரங்களில் கணிப்பையும் மீறி, ஆட்டத்தின் முடிவுகள் அமைகின்றன. டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 130 ரன் இலக்கை எட்ட முடியாமல் குஜராத் அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை உதாரணமாக கூறலாம். அந்த வகையில் வெற்றிக்காக ஒவ்வொரு அணியும் போராடி வருகிறது.
எனவே, IPL Rivalry week-ல் நடைபெறும் போட்டிகள், நடப்பு சீசனில் அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றே கருதலாம். எந்தெந்த நாட்களில் எந்த அணிகள் மோதுகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.
Rivalry week போட்டிகள்:
மே 6 (பிற்பகல் 3.30) : சென்னை - மும்பை
மே 6 (இரவு 7.30) : டெல்லி - பெங்களூரு