மும்பை: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று (மே 21) நடைபெறுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று, 6ஆவது இடத்தில் உள்ளது.
வெற்றி முக்கியம்: மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சன் ரைசர்ஸ் போட்டியை வீழ்த்தியாக வேண்டும். நடப்பு சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற 6 போட்டிகளில், 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி. 186, 213, 200 ரன்களை சேசிங் செய்து பலத்தை நிரூபித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இன்றைய போட்டியில் முழு பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
சன் ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. 8 புள்ளிகளைப் பெற்றுள்ள அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது. எனினும், இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிப் பெற போராடும். கிளாசென், மார்க்ரம், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்கள்.
மும்பை உத்தேச அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், கேமரூன் க்ரீன், கிறிஸ் ஜோர்டன், ஷோகீன்/குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், மத்வால்.
சன் ரைசர்ஸ் உத்தேச அணி:அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹேரி ப்ரூக், பிலிப்ஸ், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, மயங்க் தாகர், நிதிஷ் குமார் ரெட்டி/உம்ரான் மாலிக், நடராஜன்.
மற்றொரு ஆட்டம்: பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, முதலிடத்தில் உள்ளதால் அந்த அணி தோற்றாலும் பாதிப்பில்லை. ஆனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் கோலி, டுபிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பியே அந்த அணி உள்ளது.
பெங்களூரு உத்தேச அணி: விராட் கோலி, டுபிளெஸ்ஸி (கேப்டன்), மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், பிரேஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), பார்னல், கரண் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சபாஸ் அகமது.