மும்பை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைகின்றன. 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த போது விவ்ராந்த் சர்மா ஆட்டமிழந்தார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை சேர்த்தது.