மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங்கில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக யாஷவி ஜாய்ஸ்வால் சதம் அடித்து 124 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதேபோல், மும்பை அணியின் அர்ஷத் கான் 3 மற்றும் சாவ்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால், ஆட்டத்தின் முதல் இன்னிங்கிஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேமரூன் கிரீன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேநேரம், அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 3 என்ற சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு தொடர்ந்து பேரதிர்ச்சியைக் கொடுத்தார். இதனால், இது வரையிலான 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புடன் என்ற 101 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.