அகமதாபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இரவு 7 மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில், அகமதாபாத் நகரில் மழை பெய்தது. இதனால் ஆடுகளம் மூடப்பட்டது. மழை ஓய்ந்த பின் 7.45 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
MI vs GT: மழையால் தாமதமாகிய ஆட்டம்-டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு! - மும்பை குஜராத் மோதல்
குஜராத் அணிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்
மும்பை அணி: இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.
குஜராத் அணி:விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், மொகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.