லக்னோ:ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சாம் கரன் அணியை வழிநடத்துகிறார். இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன், லக்னோ அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
LSG vs PBKS: லக்னோ அணி பேட்டிங்: பஞ்சாப் அணியை வழிநடத்தும் சாம் கரன் - பஞ்சாப் லக்னோ மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்
லக்னோ அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, ஸ்டொய்னிஸ், பூரன் (விக்கெட் கீப்பர்), படோனி, மார்க்வுட், ஆவேஷ் கான், யாத்விர் சிங், பீஷ்னோய்.
பஞ்சாப் அணி: அதர்வா டெய்ட், ஹர்ப்ரீத் பாட்டியா, மேத்யூ ஷார்ட், சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், சாம் கரன் (கேப்டன்), ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, சாஹர், அர்ஷ்தீப் சிங்