அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்ட்யா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா, சுப்மன் கில் களம் இறங்கினர்.
LSG vs GT: குஜராத் டைட்டன்ஸ் ரன் மழை: லக்னோவுக்கு 228 ரன்கள் இலக்கு! - குஜராத் லக்னோ அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அதிரடியாக ரன் குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 228 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். இந்நிலையில் 81 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்துவீச்சில் சாஹா ஆட்டமிழந்தார். 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அவர் 81 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் வெளியேறினார். எனினும் மறுமுனையில் சுப்மன் கில் அதிரடியை தொடர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களைக் குவித்தது.
சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்களுடனும் (2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்), டேவிட் மில்லர் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் மொஷின் கான், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.