ஹைதராபாத்: 16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. லீக், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்நிலையில், நாளை (மே 28) அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
நடப்பு தொடரில், ஒட்டுமொத்தமாக ரூ.46.5 கோடி மதிப்பிலான பரிசுகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்குகிறது. கடந்த 2008, 2009ம் ஆண்டு சீசனில் கோப்பையை வென்ற அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.4.8 கோடியும், 2ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் வழங்கப்பட்டது. தொடக்கம் முதலே ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் சீசன்களில் பரிசுத் தொகையை மேலும் உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.20 கோடி பரிசு:அந்த வகையில் நடப்பு சீசனில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரொக்க பரிசாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்பட உள்ளது. 3ம் இடத்தில் இருக்கும் அணிக்கு ரூ.7 கோடியும், 4வது இடத்தில் உள்ள அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் கேப் வீரருக்கு எவ்வளவு?:ஒவ்வொரு சீசனினும் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு (Orange cup) குறிப்பிட்ட தொகை பரிசாக வழங்கப்படும். நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் விவரம் வருமாறு:
* சுப்மன் கில் (851 ரன்கள், குஜராத் அணி)
* டு பிளெஸ்ஸி (730 ரன்கள், பெங்களூரு)
* விராட் கோலி (639 ரன்கள், பெங்களூரு)
* யஷஸ்வி ஜெய்ஸ்வால் (625 ரன், ராஜஸ்தான்)
* டெவோன் கான்வே (625 ரன்கள், சென்னை)